யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோற்றதால் ரசிகர்கள் கடும் அமளி : கார் பந்தய வீரரை தாக்கி வாட்சை பறித்த கும்பல்

0 3049
யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோற்றதால் ரசிகர்கள் கடும் அமளி : கார் பந்தய வீரரை தாக்கி வாட்சை பறித்த கும்பல்

யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஏற்பட்ட அமளியில் இங்கிலாந்தைச் சேர்ந்த பார்முலா ஒன் கார் பந்தய வீரர் லாண்டோ நோரிஸின் (Lando Norris) 41 லட்ச ரூபாய் மதிப்பிலான வாட்ச் பறிக்கப்பட்டது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இத்தாலியிடம் இங்கிலாந்து தோல்வி அடைந்தது. ஆத்திரமடைந்த இங்கிலாந்து ரசிகர்கள் அரங்கிற்குள் அத்துமீறி நுழைந்து இத்தாலி ரசிகர்களை தாக்கினர்.

போட்டி நிறைவடைந்து தனது மெக்லாரென் (McLaren) காரில் புறப்படத் தயாரான லாண்டோ நோரிஸை (Lando Norris) தாக்கிய கும்பல் அவர் அணிந்திருந்த ரிச்சர்ட் மில் (Richard Mille) வாட்சை பறித்துச் சென்றது.

தாக்குதலில் அவர் காயமடையாத போதும் 41 லட்ச ரூபாய் மதிப்பிலான ஸ்விஸ் வாட்சை பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments