கொசுவுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யும் பணி தொடக்கம்

0 1688
கொசுவுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யும் பணி தொடக்கம்

சென்னையில் கொசுவுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் RT - PCR  பரிசோதனை முறை தொடங்கவுள்ளது.

ஏடிஸ் கொசுவின் மூலம் பரவும் ஜிகா வைரஸ் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பரவிவரும் நிலையில், கேரளா மாநில எல்லையோர மாவட்டங்களான தேனி, தென்காசி, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட 65 இடங்களில் சேகரிக்கப்பட்ட கொசுக்களுக்கு, ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செயல்படும் மாநில சுகாதார ஆய்வக கூடத்தில் தொடங்கப்பட்டது.

அதன்படி, 25 கொசுக்களை ஒரு குப்பியில் அடைத்து, அவற்றுக்கு பரிசோதனை செய்யும் பணியில் தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் ஈடுபட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments