மது அருந்திய இளைஞர்களை பட்டாக்கத்தியால் மிரட்டி ஓட, ஓட விரட்டிய நபர்

0 1892
மது அருந்திய இளைஞர்களை பட்டாக்கத்தியால் மிரட்டி ஓட, ஓட விரட்டிய நபர்

சென்னை திரு.வி.க.நகரில் மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்களை, நபர் ஒருவர் அரிவாளுடன் வந்து ஆவேசமாக ஓட ஓட தாக்கி விரட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திங்கட்கிழமை இரவு பல்லவன் சாலையிலுள்ள காலி இடத்தில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது அருந்திவிட்டு நின்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த இமான் என்ற நபர் குடிபோதையில் கையில் பட்டாக்கத்தியுடன் ஆவேசமாக வந்து கும்பலில் இருந்த அனைவரையும் சரமாரியாக தாக்க தொடங்கினார்.

அதிர்ச்சி அடைந்த அந்த கும்பல் தங்களது இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு நாலாபுறமும் தெறித்து ஓடியது. பின்னரும் விடாத இமான், கூட்டாளியின் உதவியுடன் பைக்கில் துரத்திச் சென்றதோடு, மீண்டும் அதே இடத்திற்கு பைக்கை எடுக்க வந்த நபர்களையும் தாக்க முற்பட்டார்.

சிசிடிவி காட்சிகளை வைத்து இமானை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments