"பதவிக்காலம் முடிந்ததும் அரசுக்குச் சொந்தமான இடங்களை காலி செய்ய வேண்டும்" - எம்.பி. எம்.எல்.ஏக்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

0 1751
"பதவிக்காலம் முடிந்ததும் அரசுக்குச் சொந்தமான இடங்களை காலி செய்ய வேண்டும்" - எம்.பி. எம்.எல்.ஏக்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி காலம் முடிந்ததும் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள  தங்களது அலுவலகங்களை உடனடியாக  காலி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், எம்பியாக இருந்தபோது மாநகராட்சி சார்பில் தனக்கு வழங்கப்பட்ட அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் அதனைத் திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி இருந்தார்.

மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தனது பதவிக்காலம் முடிந்தும் அலுவலகத்தை பயன்படுத்தி வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பதவிக்காலம் முடிந்ததும் கோபாலகிருஷ்ணன் அலுவலத்தை காலி செய்திருக்க வேண்டும் என்றும் பொறுப்பான பதவியில் இருந்தவர் இதுபோன்று செய்யலாமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments