தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு.!

0 2287
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு.!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், நீலகிரி, கோவையில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் நெல்லை, குமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வங்கக் கடல் பகுதிகளுக்கு இரு நாட்களுக்கும், அரபிக்கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கும் செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments