மேகதாது அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்து காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் போராட்டம்

0 1871
மேகதாது அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்து காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் போராட்டம்

மேகதாது அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்து, காவிரி பாசனப் பகுதி விவசாய அமைப்புகள், எடியூரப்பா உருவபொம்மை மற்றும் புகைப்படங்களை எரித்து போராட்டம் நடத்தினர்.

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாக உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கும்பகோணத்திலும் போராட்டக்காரர்கள் எடியூரப்பா உருவபொம்மையை தீ வைத்து கொளுத்தினர். போலீசார் ஈரச்சாக்கை போட்டு தீயை அணைத்தனர். அப்போது போராட்டக்காரர்கள் புகைப்படங்களை கொளுத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பேருந்து நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது உருவபொம்மை எரிக்கப்பட்டதால், போலீசார் தயாராக வைத்திருந்த குடத்தில் இருந்து தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், எடியூரப்பாவின் புகைப்படத்தையும் உருவ பொம்மையையும் எரிக்க முயன்றபோது, காவல்துறையினர் தடுத்துநிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments