தமிழ்நாட்டிற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

0 2587
தமிழ்நாட்டிற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

மிழ்நாட்டிற்கு மக்கள் தொகை அடிப்படையில் சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைத்திடவும், ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளித்திடவும் வலியுறுத்தி  பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவில் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ததை சரிசெய்ய வலியுறுத்தி ஏற்கெனவே எழுதியிருந்த கடிதத்தையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால், மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ள தடுப்பூசி தேவையை நிறைவு செய்வது மிகவும் கடினமாக உள்ளது என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

18 வயது முதல் 44 வயது பிரிவினருக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழகத்திற்கு தடுப்பூசி வழங்கப்படாததே தற்போதைய கடும் பற்றாக்குறைக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். தகுதியுள்ள ஆயிரம் பேருக்கு 302 டோஸ்கள் என்ற அளவிலேயே தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது தமிழகத்திற்கான ஒதுக்கீடு மிகவும் என்பதையும் பிரதமருக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments