ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

0 3272

மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி தொடரையும் கைப்பற்றியது.

முதல் 2 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியே வெற்றிபெற்றிருந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் லூசியாவில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.

142 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி எளிதாக இலக்கை எட்டியது கெய்ல் 38 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் குவித்து, ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments