2 தீவிரவாதிகள் கைதைத் தொடர்ந்து உ.பி. ம.பி. மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

0 2712

க்னோவில் இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய 5 தீவிரவாதிகள் கைகளில் வெடிகுண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் இருப்பதால் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய டிஜிபி முகுல் கோயல், அல்கொய்தா தீவிரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டது ஒரு கடலுக்குள் மறைந்திருக்கும் பனிப்பாறையின் மேல் பரப்பு போன்றதாகும் என்றார்.

முழுப் பாறையும் இன்னும் கடலுக்குள் மறைந்திருப்பதாக அவர் கூறினார். உளவுத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் இதுவரை 30 சதவீத நடவடிக்கை தான் எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் 70 சதவீத நடவடிக்கையில் தீவிரவாதத் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments