450 கி.மீ இலக்கைத் தாக்கும் பிரமோஸ் ஏவுகணை கடலில் விழுந்தது..! தொழில்நுட்பக் கோளாறு காரணமா என டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் ஆய்வு

0 3729
450 கி.மீ இலக்கைத் தாக்கும் பிரமோஸ் ஏவுகணை கடலில் விழுந்தது..! தொழில்நுட்பக் கோளாறு காரணமா என டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் ஆய்வு

டிசா மாநிலம் பாலசோரில் சோதனைக்காக செலுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை எட்டாமல், ஏவிய சில நிமிடங்களில் கடலில் விழுந்தது.

450 கிலோமீட்டர் தூரம் வரை இலக்கைத் தாக்கக் கூடிய ஆற்றல் மிக்கதான பிரம்மோஸ் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததையடுத்து இதற்கான காரணம் ஆராயப்படும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மிகவும் நம்பகமான இந்தியாவின் ஏவுகணையான பிரம்மோஸ், 300 கிலோமீட்டர் இலக்கை எட்டி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரம்மபுத்திரா, ரஷ்யாவின் மோஸ்க்வா ஆகிய இரண்டு நதிகளின் பெயரை இணைத்து இந்த ஏவுகணைக்கு பிரம்மோஸ் என்று பெயரிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments