நீட் தேர்வு எழுத இன்று மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்..!

0 4064

நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவ,மாணவிகள் இன்று மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டுவிட்டர் பதிவில், நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் மொத்தம்198 நகரங்களில் நீட் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.கொரோனா தடுப்பு வழிகாட்டி விதிமுறைகளை கடை பிடித்து , நீட்தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments