மேகதாது அணையை கட்டியே தீருவோம் - கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்

0 2643

கர்நாடக மக்களின் குடிநீருக்கு முக்கிய அங்கமாக இருப்பதால் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் தமிழக அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் பசவராஜ், மேகதாதுவில் அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என தெரிவித்தார்.

அணை தொடர்பான பிரச்னைகளை காவிரி தீர்ப்பாயம் தீர்த்து வைத்ததால் மேகதாது அணையின் கட்டுமானத்தை நிறுத்த எந்த காரணமும் இல்லை என்றும், கர்நாடக அரசின் கோரிக்கையை மத்திய அரசு சட்டப்படி பரீசிலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments