நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் - கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு

0 4141
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டுவிட்டர் பதிவில், நீட் தேர்வுகுறித்த  அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவ - மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் மொத்தம்198 நகரங்களில் நீட் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டி விதிமுறைகளை கடை பிடித்து , நீட்தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments