குடியும் சந்தேகமும் - கொலையும் கைதும்.. நிர்கதியான இரண்டு குழந்தைகள்..!

0 3010

துரையில் கணவர் தூங்கும்போது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார். குடும்ப வறுமையைப் போக்க சிறிய அளவில் உணவகம் நடத்தி வந்த மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு குடித்துவிட்டு வந்து கொடுமை செய்து வந்த கணவனை விரக்தியின் உச்சத்தில் கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

மதுரை ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த தனபாண்டியன் - தனலட்சுமி தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வந்த தனபாண்டியனுக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது. ஊரடங்கால் வேலையின்மையும் உடன் சேர்ந்துகொள்ள குடும்பத்தில் வறுமை தாண்டவமாடி இருக்கிறது. இதனையடுத்து அதே பகுதியில் சிறிய அளவில் சிற்றுண்டி உணவகம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார் தனலட்சுமி.

உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கனிவோடும் மரியாதையோடும் நடந்துகொள்வது தனலட்சுமியின் பழக்கம் என்கின்றனர் அக்கம்பக்கத்தினர். வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க அவர்களிடம் சகஜமாக சிரித்துப் பேச வேண்டிய தேவையும் இருந்திருக்கிறது தனலட்சுமிக்கு. எப்போதும் குடிபோதையிலேயே உழன்ற தனபாண்டியனின் மனதுக்குள் மனைவியின் இந்த செயல்பாடுகள் சந்தேகத்தீயை மூட்டிவிட, நாள்தோறும் அவரிடம் சண்டை போட்டு வந்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை இரவும் வழக்கம்போல் தனபாண்டியன் குடித்துவிட்டு சண்டை இழுக்க, வீடே கூச்சலும் குழப்பமுமாக இருந்திருக்கிறது.

இந்த நிலையில்தான் காலை திடீரென கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அழுதுகொண்டே அக்கம்பக்கத்தினரிடம் கூறியிருக்கிறார் தனலட்சுமி. ஆனால் அவரது பேச்சில் சந்தேகம் கொண்ட அக்கம்பக்கத்தினர் சிலர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையில் தனபாண்டியனின் கழுத்து எலும்புகள் முறிருந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வேறு வழியின்றி விசாரணையில் கணவனைக் கொன்றதை தனலட்சுமி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

கணவனின் குடிபோதை டார்ச்சரால் கடந்த 6 மாதங்களில் மட்டும் 5 வீடுகள் மாறிவிட்டதாகக் கூறியுள்ள தனலட்சுமி, பிள்ளைகள் இருவரையும் நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்ற கனவோடு இருந்ததாகக் கூறியிருக்கிறார். தனபாண்டியன் உடனான தினசரி போராட்டத்தில் விரக்தியின் உச்சத்தில் இருந்ததாகவும் இனிமேலும் தன்னை நிம்மதியாக வாழ விடமாட்டார் என்று எண்ணி, இரவு துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.

குடியின் விளைவால் தந்தையை இழந்து, தாயும் சிறைக்குச் சென்றுவிட்ட நிலையில், இரண்டு பிள்ளைகளும் நிர்கதியாக நிற்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments