மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தினால் பெட்ரோல் விலை உயர்வில் இருந்து தப்பிக்கலாம் -அமைச்சர் நிதின் கட்கரி

0 2989

இயற்கை எரிவாயு, எத்தனால் ஆகிய மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தினால் பெட்ரோல் விலை உயர்வில் இருந்து தப்பிக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் நாட்டின் முதல் வணிக முறையிலான எல்என்ஜி எனப்படும் நீர்ம இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையத்தைத் திறந்து வைத்து நிதின் கட்கரி பேசினார். அப்போது, எத்தனாலை வாகன எரிபொருளாகப் பயன்படுத்தினால் லிட்டருக்குக் குறைந்தது 20 ரூபாய் சேமிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

ஒன்றுக்கு மேற்பட்ட எரிபொருளையோ அல்லது எரிபொருள் கலவையையோ பயன்படுத்தி இயங்கும் இஞ்சின்களைத் தயாரிக்கும் கொள்கையை அரசு விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments