பல ஆண்டுகால தவறான உறவை துண்டித்துக்கொண்டதால் பெண் கத்தியால் குத்திக் கொலை - ஆண் நண்பருக்கு வலை

0 26318
சேலத்தில் தன்னுடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலத்தில் தன்னுடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கருப்பூரில் கணவனைப் பிரிந்து இரண்டு மகள்களுடன் வசித்து வந்த சித்ரா என்ற அந்தப் பெண்ணுக்கும் அழகாபுரத்தைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமான ஏழுமலை என்பவனுக்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது.

பல ஆண்டுகளாக தன் வீட்டிற்கு வந்து சென்றுகொண்டிருந்த ஏழுமலையிடம்,“மகள் படிப்பை முடித்து வேலைக்குச் செல்லத் துவங்கி விட்டதால் வர வேண்டாம் என  கூறியிருக்கிறார் சித்ரா. அதனை ஏற்றுக்கொள்ளாமல் அடிக்கடி வந்து தொல்லை செய்த ஏழுமலைக்கும் சித்ராவுக்கும் இன்று காலை எழுந்த சண்டையில், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அவரைக் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி இருக்கிறான் ஏழுமலை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments