கட்டுக்கடங்காத கூட்டத்தால் 3வது அலை வருமோ என்ற அச்சம் -ஓபிஎஸ் கவலை

0 2422

ரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு வணிக வளாகங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் அலைமோதிய கட்டுக்கடங்காத கூட்டத்தை காணும் போது, 3 ஆவது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுவதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா வழிகாட்டு முறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் விதித்தாலும் அது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உதவாது என்று குறிப்பிட்டுள்ள அவர், இதில் உடனடியாக கவனம் செலுத்தி, கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், எக்காரணத்தை கொண்டும் கூட்டம் கூட அனுமதிக்க கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments