டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளின் பலன் என்ன ? : அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1505
டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளின் பலன் என்ன ? : அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டெங்கு பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளின் பலன் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர்  தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெங்கு  கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, கொரோனா இரண்டாவது அலை தணிந்துள்ள நிலையில், டெங்கு பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளின் பலன் குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமபடி, மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments