பாஜக தேசிய செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

0 5729
பாஜக தேசிய செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பாஜக தேசிய செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

பா.ஜ.க. தலைமையகத்தில் தேசிய செயலர்கள் கூட்டம் கட்சித் தலைவர் நட்டா தலைமையில் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நட்டா மற்றும் தேசிய செயலாளர்கள் பிரதமர் மோடியை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, அடுத்தாண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் வியூகம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்ற நிலையில் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments