சினிமா ஆசையில் வந்து லுங்கி வியாபாரியாக மாறிய லுங்கிராஜ் : ரைமிங்காக பாட்டுப் பாடி , கதை சொல்லி வியாபாரம் செய்கிறார்

0 4741

சினிமா ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு கிடைக்காததால், பிழைப்புக்காக வந்த ஒருவர் லுங்கி வியாபாரியாக மாறி உள்ளார்.

சாலிகிராம பகுதியில் டிவிஎஸ் - XL வாகனத்தில் வலம் வரும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுப்புராஜ் என்ற லுங்கி ராஜ் வித்தியாசமான முறையில் பாட்டு பாடி, லுங்கி வியாபாரம் செய்து வருகிறார்.

லுங்கி கதையை முடித்து துண்டுக் கதைக்கு தாவும் லுங்கிராஜ் தமது துண்டுகளை வாங்கி தலை துவட்டினால் முடி கொட்டாது - இளநரை வராது - உடல் சூடு இருக்காது என்று மருத்துவக் குறிப்புகளை ரைமிங்காக அள்ளி வீசி வியாபாரம் செய்கிறார்.

வார்த்தைகளை கோர்வையாகவும் சுவாரசியமாகவும பேசி வியாபாரம் செய்யும் லுங்கி ராஜ், எதிர்காலத்தில் காமெடி நடிகராக வேண்டும் என்பதே தமது லட்சியம் என கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments