கணவன் புதிய செல்போன் வாங்கியதால், கர்ப்பிணி மனைவி தூக்கிட்டுத் தற்கொலை : மயிலாடுதுறையில் சோக சம்பவம்.!

0 9580

யிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வருமானத்துக்கு மீறி அதிக விலைக்கு கணவன் செல்போன் வாங்கியதால் ஏற்பட்ட தகராறில் நிறைமாத கர்ப்பிணி மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரையபுரம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான சிலம்பரசனின் மனைவி சூர்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் சிலம்பரசன் 16 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக செல்போன் வாங்கியுள்ளார்.

பிரசவ செலவுக்கே கையில் பணமில்லாத சூழலில் இவ்வளவு ரூபாய் செலவழித்து செல்போன் தேவையா என கணவனிடம் சண்டையிட்ட சூர்யா மனமுடைந்து காணப்பட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் சூர்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், வயிற்றிலிருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments