வந்தாச்சு வலிமை அப்டேட்... உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்.!

0 11703

டிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் இரண்டு வருடங்களாக காத்திருந்த நிலையில், தற்போது வந்துள்ள அந்த படத்தின் மோஷன் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்து வெற்றிப்பெற்றப் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரது கூட்டணியில் உருவாகி வரும் படம் வலிமை.

ஹீமாகுரேஷி, போனிகபூரின் மகள் ஜான்வி கபூர், சுமித்ரா, யோகிபாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேய கும்மகோண்டா ஆகிய பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பின்னணி இசைக்கு பேர்போன யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்து வரும் நிலையில், நிரவ் ஷா இந்த படத்தின் ஒளிப்பதிவாளாராக பணியாற்றியுள்ளார்.

2 வருடங்களுக்கு முன்பாக 2019ம் ஆண்டின் இறுதியில் ஹைதராபாத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அப்போது படம் 2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று கூறப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்து வந்த கொரோனா அலைகளால் வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைவு பெறாமல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே படத்தினை குறித்த தகவல்களை துளியளவும் வெளியே கசிந்து விடமால் பார்த்து வந்தனர். இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக வலிமை படத்தின் அப்டேட் கேட்டு சமூகவலைதளங்களிலும் பலமுறை ட்ரென்ட் செய்தனர்.

ஆனால் என்னதான் நடிகர் அஜித் பட ரசிகர்கள் அப்டேட் அப்டேட் கேட்டாலும், அதற்கு தொடர்ந்து வலிமை படக்குழுவினர் பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் அதை மட்டும் தரமாட்டோம் என்று மவுனம் காத்து வந்தனர்.

இதற்கிடையே அஜித் ரசிகர்கள் ஓட்டுக்கேட்டு வரும் அரசியல்வாதிகள், பூஜை நடத்தும் பூசாரிகள், விளையாட்டு வீரர்கள் என கிடைக்கும் இடங்களில் எல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் ரசிகர்களின் வலிமை அப்டேட் குறித்த ஆர்வம் தற்போது நடந்து வரும் யூரோ கால்பந்து தொடர் வரை எதிர்த்தது.

இந்த நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்து பொறுமையிழந்த ரசிகர்களுக்கு தற்போது வலிமைப்படம் குறித்த அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. படத்தின் அட்டகாசமான மோசன் போஸ்டர் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் பல மாதங்களாக அப்டேட் கேட்டு காத்திருந்த ரசிகர்கள் தற்போது வந்துள்ள இந்த அப்டேட் மூலம் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைத் தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments