திங்கட்கிழமை காலை பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2847

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் திங்கட்கிழமையன்று கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை புகார்களாக அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் ஏற்கனவே தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் நேரடியாக சென்னை தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிபிரிவில் மனு அளித்து வரும் நிலையில், திங்கட்கிழமை காலை 10 மணியளவில், முதலமைச்சரின் தனிப்பிரிவில், முதல்வரே நேரில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களது கோரிக்கைகளை கேட்டறிய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று ஒரு நாள் மட்டும் முதல்வர் நேரில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிய உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments