யூரோ கோப்பை இறுதி ஆட்டம் இன்று : இத்தாலி - இங்கிலாந்து மோதல்

0 3207

ண்டனில் இன்று நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி இறுதி ஆட்டத்தில்  இத்தாலி, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. அரையிறுதி ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் இரண்டுக்கு ஒன்று என்கிற கோல் கணக்கில் டென்மார்க் அணியை இங்கிலாந்து வீழ்த்தியது.

1966ஆம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனி அணியைத் தோற்கடித்து இங்கிலாந்து கோப்பையை வென்றது.

55ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இப்போது இறுதிப் போட்டியை அடைந்துள்ளது. அரையிறுதியில் ஸ்பெயின் அணியை வீழ்த்திய இத்தாலி அணியும் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.

இத்தாலி அணி கடந்த 33 ஆட்டங்களில் தொடர்ந்து வென்றுள்ளது குறிப்பிடத் தக்கது. இத்தாலி - இங்கிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி லண்டன் வெம்ப்ளே விளையாட்டரங்கில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்க உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments