இந்தியாவில் வினய் பிரகாஷ் என்பவரை குறைதீர்க்கும் அதிகாரியாக ட்விட்டர் நியமனம்

0 2262
இந்தியாவில் வினய் பிரகாஷ் என்பவரை குறைதீர்க்கும் அதிகாரியாக ட்விட்டர் நியமனம்

ந்தியாவில் வினய் பிரகாஷ் என்பவரை குறைதீர்க்கும் அதிகாரியாக நியமித்துள்ளதாக டுவிட்டர் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்களைகளை ஏற்பது தொடர்பாக மத்திய அரசுடன் உரசல் போக்கை மேற்கோண்ட டுவிட்டர் நிறுவனம் அதற்காக வழக்கு விசாரணையையும் சந்தித்து வருகிறது.

கடந்த 8 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில்  புதிய விதிகளின் படி இந்தியர் ஒருவரை குறைதீர்க்கும் அதிகாரியாக நியமிக்கவில்லை என்றால் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என டுவிட்டருக்கு எச்சரிக்கை விடப்பட்டது. 

இந்த நிலையில்  வினய் பிரகாஷை அந்த பதவிக்கு நியமித்துள்ள டுவிட்டர் grievance-officer-in @ twitter.com என்ற இணைய முகவரியில் அவரை தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.

அத்துடன் அரசு விதிகளை ஏற்றதற்கான ஒரு மாத கால வெளிப்படைத்தன்மை அறிக்கையையும் டுவிட்டர் வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments