பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ : மீண்டும் ஒரு முறை கைது செய்ய சிபிசிஐடி முடிவு

0 1932
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ : மீண்டும் ஒரு முறை கைது செய்ய சிபிசிஐடி முடிவு

சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட மூன்றாவது வழக்கில் போக்சோ சட்டப் பிரிவை சேர்த்துள்ள சிபிசிஐடி போலீசார், அவரை மீண்டும் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் போக்சோ உள்ளிட்ட 3 வழக்குகளின் கீழ் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். இதில் இரண்டு வழக்குகளில் ஏற்கனவே அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது வழக்கு தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வழக்கில் மட்டுமே சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு வழக்கிலும் அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments