அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இணையவழி மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு

0 4112
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இணையவழி மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு

ரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இணையவழியில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான பணிகளில் கல்லூரிக் கல்வி இயக்ககம் ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து ஆறாயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த ஏதுவாக மொத்த இடங்கள், படிப்புகள், பிரிவுகள் போன்ற விவரங்களை இணையத்தளத்தில் புதுப்பிக்கும் பணியில் கல்லூரிக் கல்வி இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஒரேநேரத்தில் ஒரு மாணவர் பல்வேறு கல்லூரிகளிலும், பல்வேறு படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கும் வகையில் இணையத்தளத்தில் வசதி செய்யப்பட உள்ளது.

12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியான உடன், ஆகஸ்ட் 1 முதல் இணையவழியில் மாணவர் சேர்க்கையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கல்லூரிக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 89 ஆயிரம் இடங்களில் சேர 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments