உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 635 இடங்களில் அமோக வெற்றி

0 4447
உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 635 இடங்களில் அமோக வெற்றி

த்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு 635 இடங்களில் மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. இது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மற்றும் யோகி தலைமையிலான மாநில அரசின் கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கையை  காட்டுவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார் .

439 பதவிகளுக்காக நேற்று காலை 11 மணி தொடங்கி ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. பிற்பகல் 3  மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டன. 

இதில் பாஜகவுக்கு 85 சதவீத வெற்றி கிடைத்தது. ஏற்கனவே 349 பேர் போட்டியின்றி தேர்வாகினர். யோகி தலைமையிலான அரசின் மகத்தான வெற்றிக்கு பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments