மகாராஷ்டிராவில் மனநலம் பாதித்த நபரை 10 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் சேர்த்த ஆதார்.. வைரல் சம்பவம்

0 4175

10ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மனநலம் பாதித்த நபரை குடும்பத்துடன் இணைப்பதற்கு ஆதார் பெரிதும் துணையாக இருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போலீசார் 8 வயது சிறுவனை மீட்டு, சமர்த் தாம்லேவிடம் ஒப்படைத்தனர். அமனுக்கு தற்போது 18வயது ஆன நிலையில் ஆதார் எடுப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது பயோமெட்ரிக் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து விசாரித்தில் அவனுக்கு ஏற்கனவே ஆதார் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும் அவனது பெயர் முகமது ஆமீர்  என்பதும், பெற்றோர் மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் ஓட்டல் நடத்தி வருவதும் தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து அமன் என்ற முகமது ஆமீர் அவனது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments