நாடு முழுவதும் இதுவரை 37.57 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

0 2466
நாடு முழுவதும் இதுவரை 37.57 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் இதுவரை 37 கோடியே 57 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், நேற்று ஒரே நாளில் 34 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, பிகார், குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் 18 முதல் 44 வயது பிரிவினருக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 62 லட்சத்து 25 ஆயிரத்து 332 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 2 லட்சத்து 2 ஆயிரத்து 804 நபர்கள் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்தியுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments