தமிழகத்தில் இனி தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2500
தமிழகத்தில் இனி தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மிழகத்தில் இனி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு வராது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கொரோனாவுக்கு பிறகு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி முக்கியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த "ஓடலாம் நோயின்றி வாழலாம்" என்ற தலைப்பில் லண்டனில் நடைபெறும் விர்ச்சுவல் சேலஞ்ச் மாரத்தானில் அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

இன்று அதிகாலை நான்கே முக்கால் மணி அளவில் கிண்டி லேபர் காலனியில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்ட அவர், மெரினா கடற்கரையில் நிறைவு செய்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 21 கிலோமீட்டர் மாரத்தானில் தாம் ஓடும் 129 ஆவது மராத்தான் இதுவாகும் என்றார்.

தடுப்பூசி தட்டுப்பாடு நீக்குவதற்கு நேற்றிரவு 5 லட்சம் தடுப்பூசிகள் சென்னை கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments