இந்தியாவில் 35 சதவீத புலிகள் வனப்பகுதிக்கு வெளியே வசிப்பது ஆய்வில் கண்டுபிடிப்பு

0 4843
இந்தியாவில் 35 சதவீத புலிகள் வனப்பகுதிக்கு வெளியே வசிப்பது ஆய்வில் கண்டுபிடிப்பு

ந்தியாவில் 35 விழுக்காடு புலிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே வசிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐநாவின் சுற்றுச்சூழல் துறையும், சர்வதேச வனநிதியமும் நடத்திய ஆய்வறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் புலிகள் வாழுமிடம் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று துண்டிக்கப்பட்டுள்ளதால், அவைகள் உணவுக்காக மனிதனைச் சார்ந்த இடங்களுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் நிலம் மற்றும் இயற்கை வளங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வனப்பகுதிகள் துண்டாடப்படுவதாகவும், இதனால் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான மோதல் அதிகமாக நடப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments