கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலை அறங்காவலர் பி.கே.வாரியர் மறைவு

0 4494
கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் அறங்காவலரும், மூத்த ஆயுர்வேத மருத்துவருமான பி.கே. வாரியர் காலமானார்.

கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் அறங்காவலரும், மூத்த ஆயுர்வேத மருத்துவருமான பி.கே. வாரியர் காலமானார்.

1953ஆம் ஆண்டு கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் அறங்காவலராக பொறுப்பேற்ற பி.கே. வாரியர், ஆயுர்வேத மருத்துவத்தை சாமானியர்களுக்கும் எடுத்துச் சென்றதில் முக்கிய பங்காற்றினார்.

ஆயுர்வேத மருத்துவத்துக்கு அவர் அளித்த பங்களிப்பை பாராட்டி 1999ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2010ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.

100 வயதான பி.கே.வாரியர் கோட்டக்கலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments