கொரோனா விலக நடிகர் யோகிபாபு குடும்பத்துடன் பூஜை.. ஆந்திரா கோவிலில் வேண்டுதல்..!

0 6374

மிழ் திரைஉலகின் காமெடி நடிகர் யோகி பாபு ஆந்திர மாநிலத்தில் உள்ள பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் குடும்பத்துடன் சாமிதரிசனம் செய்தார். திருமண வரவேற்புக்கு திட்டமிட்ட நிலையில் கொரோனா ஊரடங்கால் குழந்தைக்கு தந்தையான யோகிபாபுவின் வேண்டுதல் ரகசியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கடுமையான போராட்டங்களுக்கு பின்னர் தமிழ் திரை உலகில் முன்னனி காமெடியனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் நடிகர் யோகிபாபு..!

தற்போது சில படங்களில் காமெடி நாயகனாக நடித்து வரும் யோகிபாபு கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி உறவுக்கார பெண்ணான மஞ்சுபார்க்கவியை நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருத்தணி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் எளிமையாக நடந்ததால் வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு திரைஉலக பிரபலங்கள் அரசியல் பிரமுகர்களுக்கு வரவேற்புக்கான அழைப்பிதழை வழங்கினார். அப்போதைய முதல்வர் இ.பி.எஸ், அப்போதைய துணைமுதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரை சந்தித்து மார்ச் மாதம் 24ஆம் தேதி காலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வழங்கி வந்த நிலையில், அன்று மாலையில் கொரோனா ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியானது.

இதனால் திட்டமிட்டபடி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை யோகிபாபுவால் நடத்த இயலவில்லை. இந்த நிலையில் யோகி பாபு, மஞ்சுபார்கவி தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்குழந்தை பிறந்தது. இதனால் திருமணவரவேற்பு நடத்த இயலாமலேயே போனது. கடவுள் பக்தி மிக்கவரான யோகிபாபு, தடைபட்ட சுபகாரியமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் பரிகாரத்திற்காகவும், தனது குடும்ப மேன்மைக்காகவும் பூஜை செய்ய திட்டமிட்டார். அதன்படி தனது உறவினரின் அறிவுத்தல் படி ஆந்திரமாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலுக்கு தனது மனைவி, மகன் மற்றும் உறவினர்களுடன் சென்றதாக கூறப்படுகின்றது.

அங்கு யோகிபாபுக்கு அங்கவஸ்திரம் அணிவித்து முதல் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலில் ஒவ்வொரு கடவுளர் சன்னதியாக சென்று யோகிபாபு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.

உலகில் கொரோனா நீங்கி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவும், மக்கள் நலம் பெற்று வாழ்வதற்காகவும் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்ததாக அவரது திரை உலக நண்பர்கள் தெரிவித்தனர். காக்டெயில் படத்தில் முருகர் வேடத்தில் தோன்றிய யோகி பாபுவின் வேண்டுதல், கொரோனா 3ஆவது அலை வராமல் தடுக்கும் என்று யோகிபாபுவின் ரசிகர்கள் நம்புகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments