சோமாலியாவில் காவல்துறை உயரதிகாரியை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு

0 2489
சோமாலியாவில் காவல்துறை உயரதிகாரியை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு

சோமாலியாவில் காவல்துறை உயரதிகாரியை குறிவைத்து நடந்த தற்கொலை படைத்தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

சோமாலியாவில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அல்-ஷபாப் பயங்கரவாதிகள் பல குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

தலைநகர் மொகதிசுவில் போலீஸ் உயரதிகாரி பர்ஹான் கரோல் (Farhan Qarole) பயனித்த வாகனத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை பயங்கரவாதிகள் மோதினர்.

இதில் அந்த அதிகாரி தப்பித்த போதும், பொதுமக்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments