விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு

0 4581
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் விக்ரம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் விக்ரம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

சுஜாதாவின் கதையில் ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1986ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதேபெயரில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தல், கொரோனா சூழல் ஆகியவற்றால் படப்பிடிப்பு தாமதமான நிலையில் விரைவில் மீண்டும் தொடங்க உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments