’நாம் இருவர், நமக்கு ஒருவர்’ - குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை கையிலெடுத்த உத்தரபிரதேச அரசு

0 2174
’நாம் இருவர், நமக்கு ஒருவர்’ - குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை கையிலெடுத்த உத்தரபிரதேச அரசு

ரு குழந்தை போதும் என்ற பெற்றோருக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

அதிகரித்துவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த உத்திரபிரதேச மாநில அரசு புதிய மக்கள் தொகை மசோதாவை அடுத்த மாதம் தாக்கல் செய்யவுள்ளது.

அதன்படி, ஒரு குழந்தை போதும் என்ற குடும்பத்தில், அந்த குழந்தைக்கு, இலவசமாக கல்வி மற்றும் மருத்துவம், IIM, AIIMS கல்லூரியில் முன்னுரிமை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் எனவும், 2 குழந்தைகளோடு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டவர்களுக்கு அரசு வேலை, தேர்தலில் போட்டியிடுதல் உள்ளிட்ட பல்வேறு தடைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments