என் அம்மாவுக்காக இத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்தேன் - பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வறுத்தெடுத்த பி.டி உஷா

0 11426
என் அம்மாவுக்காக இத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்தேன் - பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வறுத்தெடுத்த பி.டி உஷா

புகழ்பெற்ற தடகள வீராங்கனை பி.டி உஷா, இப்போதும் பி.எஸ்.என்.எல் சேவையை மட்டுமே பயன்படுத்தி வருகிறார். ஆனால், அவரையும் பி.எஸ்.என்.எல் கடுப்படித்தால், அந்த நிறுவனத்தை கடுமையாக சாடி பி.டி உஷா, ட்விட் பதிவிட பி.எஸ்.என்.எல் நிர்வாகம் அலறியுள்ளது.

தற்போது நாட்டில் பல தொலை தொடர்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தனியார் நிறுவனங்கள் முளைப்பதற்கு முன்பு இருந்தே மூத்த அண்ணான பி.எஸ்.என்.எல் சேவைதான் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கிடைத்தது. காலப் போக்கில் தனியார் நிறுவனங்கள் தங்களின் தரமான சேவையால் இந்திய வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டன.

ஆனால், மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் தன் சேவை குறைபாடு, வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில் ஆர்வம் காட்டாதது , தொழில்நுட்பங்களை மேம்பாடுத்ததாத காரணத்தினால் தன் மவுசை இழந்து நிற்கிறது. எனினும், இப்போது கூட மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பி.எஸ்.என்.எல் சேவையைத்தான் நம்பி இருக்கின்றனர்.

முக்கியமாக மலைக்காடுகள் நிறைந்த கேரளாவில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவை இன்றியமையாததாக இருக்கிறது.

கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா, இத்தனை ஆண்டு காலமாக தன் வீட்டில் பி.எஸ்.என்.எல் லேண்ட் லைன் மற்றும் பிராட்பேன்ட் சேவைகளை பயன்படுத்தி வருகிறார்.இந்த நிலையில், இவரது வீட்டிலும் கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல் தன் வேலையை காட்டியிருக்கிறது.

லேண்ட் லைன், பிராட் பேண்ட் இணைப்புகள் சரி வர கிடைக்கவில்லை. உள்ளுர் அதிகாரிகளிடத்தில் புகார் செய்தும் பயனில்லை. இதனால், கொதித்து போன பி.டி. உஷா, ஒரே ஒரு ட்விட்தான் தட்டினார். அதில், பி.எஸ்.என்.எல் கேரளா, கடந்த சில மாதங்களாக உங்கள் சேவை எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

லேண்ட் லைன் போனும், இன்டர்நெட் இணைப்பும் தொல்லை தந்து கொண்டே இருக்கிறது. இப்படியே போனால், நான் பி.எஸ்.என்.எல் இணைப்பை துண்டிக்க வேண்டியது இருக்கும். இந்த பி.எஸ்.என்.எல் நம்பரை கடந்த 1980 ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வந்திருக்கிறேன் என்று பி.டி உஷா சாடியிருந்தார்.

உஷாவின் இந்த ட்விட் பதிவு வைரலாக மத்திய தொலை தொடர்பு அமைச்சகத்தில் இருந்தும் பி.எஸ்.என்.எல் தலைமை நிர்வாகியிடத்தில் இருந்தும் பி.டி. உஷாவை போனில் பேசி சமதானம் செய்தனர். அடுத்த 30 நிமிடத்தில் பி.டி. உஷா வீட்டிலிருந்த லேண்ட் லைன் இணைப்பும் சரி செய்யப்பட்டது.

பி.டி. உஷாவின் வயதான தாயார் லட்சுமி , செல்போனில் போன் செய்து பேச தெரியவில்லை . பல ஆண்டு காலமாக பி.எஸ்.என்.எல் லேண்ட் லைன் போனில் மட்டுமே பேசி பழக்கப்பட்டுள்ளார். தன் தாயாரின் பயன்பாட்டுக்காகவே இந்த செல்போன் காலத்திலும் பி.டி. உஷா பி.எஸ்.என்.எல் லேண்ட் லைன் எண்ணை பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த லேண்ட் லைன் இணைப்பு சரியாக வேலை செய்யாததால், பி.டி. உஷா வெளியூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அவரிடத்தில் பேச முடியாமல் தாயார் கஷ்டப்பட்டுள்ளார். இதனால், பி.டி உஷா கோபத்தில் இத்தகையை பதிவை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து , பி.டி உஷா கூறுகையில், இந்த லேண்ட் லைன் இணைப்பு எனக்கு emotional ஆனது‘. தன் தாயார் அதிலிருந்துதான் என்னை அழைப்பார் என்றும் அதே போல, தன் மகன் இப்போது எம்.டி படித்து வருகிறான்.

அவனுக்காக நெட் இணைப்பும் பி.ஸ்.என்.எல்தான் பயன்படுத்துகிறேன் என்றுட் பல மாதங்கள் பொறுமையாக இருந்த தான் ஒரு கட்டத்தில்தான் பொறுமையை இழந்து ட்விட் பதிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments