மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு

0 2889
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு வினாடிக்கு 12ஆயிரம் கன அடியில் இருந்து 8ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு வினாடிக்கு 12ஆயிரம் கன அடியில் இருந்து 8ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 74 அடியாகவும், நீர் இருப்பு 36புள்ளி976 டி.எம்.சி.யாகவும் உள்ள நிலையில் அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து235கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்பட்டால் மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments