இந்தியா - இலங்கை மோதும் போட்டித் தொடர் கால அட்டவணை மாற்றம்

0 2721
இந்தியா - இலங்கை மோதும் போட்டித் தொடர் கால அட்டவணை மாற்றம்

இந்திய - இலங்கை அணிகள் இடையான கிரிக்கெட் தொடர் ஜூலை 13ஆம் நாளுக்குப் பதில் 18ஆம் நாள் தொடங்க உள்ளது.

சிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் அந்நாட்டு அணியுடன் மூன்று ஒருநாள் போட்டி, மூன்று இருபது ஓவர் போட்டித் தொடர்களில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13ஆம் நாள் தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போட்டித் தொடர் தள்ளி வைக்கப்பட்டு முதல் ஒருநாள் போட்டி ஜூலை 18ஆம் நாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments