வாகனப் பறிமுதல் புகார்களை விசாரிக்கத் தனிப்பிரிவு அமைக்க வேண்டும் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

0 1981
வாகனப் பறிமுதல் புகார்களை விசாரிக்கத் தனிப்பிரிவு அமைக்க வேண்டும்

நிதி நிறுவனங்கள் வாகனப் பறிமுதல் செய்வது குறித்த புகார்களை விசாரிக்கத் தனிப் பிரிவு அமைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

கடன் தவணை செலுத்துதலை ஆகஸ்டு 31 வரை ஒத்தி வைக்க ரிசர்வ் வங்கி அனுமதித்தும் நிதி நிறுவனங்கள் கடன் செலுத்தாத வாகன உரிமையாளர்களிடம் இருந்து வாகனங்களைக் கைப்பற்ற நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மக்கள் அளிக்கும் புகார்களைக் காவல்துறையினர் பெறுவதில்லை என்றும், காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குறிப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments