பவுண்டரி லைன் அருகே பறந்து வந்த பந்தை பாய்ந்து சென்று பிடித்த ஹர்லீன் தியோல்..! அசத்தல் கேட்ச் பிடித்து அசத்திய இந்திய வீராங்கனை

0 11307

ந்தியா-இங்கிலாந்து இடையேயான டி20 போட்டியின் போது இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் பிடித்த கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நார்த்தாம்ப்டனில் நடைபெற்றது. 19ஆவது ஓவரில் பேட்டிங் செய்த ஏமி ஜோன்ஸ் தனக்கு வீசப்பட்ட பந்தை சிக்சருக்கு விரட்ட முற்பட்டார்.

அப்போது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஹர்லீன் தியோல் அசத்தலாக டைவ் செய்து பந்தை எல்லைக் கோட்டுக்கு அப்பால் இருந்து உள்ளே தட்டிவிட்டு மீண்டும் லாவகமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.

இந்த போட்டியில் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்தாலும் ஹர்லீன் தியோல் பிடித்த கேட்சை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் உட்பட ஏராளமானோர் சிறந்த கேட்ச் என பாராட்டியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments