பதற்றத்தை தணிக்க படைகளை அனுப்பும்படி ஐநா மற்றும் அமெரிக்காவுக்கு ஹைதி அரசு கோரிக்கை..!

0 2831

ஹைதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க படைகளை அனுப்பும்படி ஐநா மற்றும் அமெரிக்காவுக்கு அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ஹைதி அதிபர் ஜோவனல் மோயிஸ் கடந்த 7 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் ஹைதி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிபர் கொலைக்கு பின் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த படைகளை அனுப்பும் படி ஐ.நா. மற்றும் அமெரிக்காவிடம் ஹைதி அரசு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்த நிலையில், அதனை ஏற்க அமெரிக்கா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments