கொரோனா சோதனைகளின் அடிப்படையில் மட்டுமே சர்வதேச பயணங்களை அனுமதிக்க வேண்டும் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

0 1709
கொரோனா சோதனைகளின் அடிப்படையில் மட்டுமே சர்வதேச பயணங்கள்

 கொரோனா சோதனைகளின் அடிப்படையில் மட்டுமே சர்வதேச பயணங்களை அனுமதிக்க வேண்டும், தடுப்பூசி அடிப்படையில அது இருக்க கூடாது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச பயணங்களில், புறப்பாடு மற்றும் வருகைக்குப் பின்னர் சோதனை நடத்தி பயணிகளை அனுமதிப்பதே போதுமானது என்றார்.

ஆனால் சில நாடுகள் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருபவர்களை மட்டுமே அனுமதிப்பது என்பதை நடைமுறைப்படுத்தி உள்ளன. எனவே அது குறித்த ஒரு முடிவுக்கு உலக நாடுகள் வர வேண்டும் என அவர் கூறினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments