இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் கார்செட்டி நியமனம்..!

0 2200

ந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் கார்செட்டியை நியமித்து அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

செனட் சபை ஒப்புதல் அளித்ததும் கார்செட்டி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. லாஸ் ஏஞ்சலிஸ் நகர மேயராக இருக்கும் எரிக் கார்செட்டி, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்.

பைடன் பதவியேற்கும் போது எரிக்கிற்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுக்கு நடுவே மக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறிய எரிக், மேயராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

பருவநிலை மாற்றம் குறித்து இந்தியாவின் கருத்தை ஆமோதித்து வரும் கார்செட்டி, இனி வரும் காலங்களில் இந்தியாவுக்கு சாதகமான பல முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கக் கடற்படையில் 8 ஆண்டுகள் பணியாற்றிய இவர், தூதராக நியமிக்கப்படும் நிலையில் லாஸ் ஏஞ்சலிசின் 100 ஆண்டுகால வரலாற்றில் மேயராக இருந்து ராஜினாமா செய்யும் முதல் நபராக எரிக் கார்செட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments