2024ஆம் ஆண்டுக்குள் 60,000 கி.மீ., நீளத்துக்கு உலகத்தரத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க இலக்கு -அமைச்சர் நிதின் கட்கரி

0 2557
2024ஆம் ஆண்டுக்குள் 60,000 கி.மீ., நீளத்துக்கு உலகத்தரத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க இலக்கு -அமைச்சர் நிதின் கட்கரி

2024ஆம் ஆண்டுக்குள் அறுபதாயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கு உலகத் தரத்திலான தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க இலக்கு வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சாலை மேம்பாடு என்னும் தலைப்பிலான மாநாட்டில் உரையாற்றிய நிதின் கட்கரி, 63 இலட்சம் கிலோமீட்டர் சாலைக் கட்டமைப்புடன் உலகில் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாலை உட்கட்டமைப்பு குறிப்பிடத் தக்க பங்காற்றுவதாகவும், உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்காக அரசு 105 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் என்னும் அளவில் அறுபதாயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கு உலகத்தரத்திலான தேசிய நெடுஞ்சாலை அமைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments