திரிபுராவில் 138 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு..! 151 மாதிரிகளை சோதித்ததில் 138 பேருக்கு உறுதி

0 2494

திரிபுராவில் 138 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 151 பேரின் RT-PCR மாதிரிகள், கொல்கத்தாவில் உள்ள ஆய்வகத்திற்கு மரபணு தர ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 138 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது.

10 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பும், 3 பேருக்கு ஆல்ஃபா வைரஸ் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்டா வைரசை விட டெல்டா பிளஸ் வைரஸ் அதிவேகமாக பரவி, நுரையீரலில் தொற்றை ஏற்படுத்தும். எனவே அதன் பரவலை கட்டுப்படுத்த மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என திரிபுரா சுகாதாரத்துறை அங்குள்ள மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments