உத்தரப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

0 1455

த்தரப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஆக்ராவில் இருந்து அயோத்திக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 நபர்கள் வந்திருந்தனர். குப்தார் காட்டில் உள்ள சரயு நதியில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது ஆற்றில் நீரோட்டம் திடீரென அதிகரித்ததால் அனைவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி 3 பெண்கள், இரண்டு ஆண்கள் ஒரு குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர். பொதுமக்கள் உதவியுடன் 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments