ஆந்திர எம்.பி அயோத்தி ராமி ரெட்டி அலுவலகங்களில் சோதனை ; ரூ.300 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு

0 1588
ஆந்திர எம்.பி அயோத்தி ராமி ரெட்டி அலுவலகங்களில் சோதனை

300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக ஆந்திர எம்பி அயோத்தி ராமி ரெட்டி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ராம்கி குழுமத்தின் தலைவரும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான ராமி ரெட்டி, தனது நிறுவனங்கள் லாபம் இன்றி நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி போலி ஆவணங்கள் மூலம் ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு செயற்கையாக நஷ்டக் கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் இந்தக் குழுமம் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் பங்குகளை வாங்கி அதிக வருவாய் ஈட்டியதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 15 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 300 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments