சிறுகுறு தொழில்களை மீட்டெடுக்க.. பொருளாதார நிபுணர்கள் யோசனை..!

0 1143

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில்களை மீட்டெடுக்க வேண்டும் என்றும், வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பொருளாதார வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், "முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம்" காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான எஸ்தர் டப்லோ, பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் தகுந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு தொழில்களை மீட்டெடுக்க தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தமது உரையில் குறிப்பிட்டார்

உற்பத்தி, சேவைத்துறை மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பன்முகத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என பொருளாதார வல்லுநரான ஜீன் டிரீஸ் குறிப்பிட்டார்

அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பல்வேறு அரசு அமைப்புகளின் செயல்திறனை உயர்த்திட வேண்டும் முன்னாள் மத்திய நிதித்துறை செயலாளர் எஸ்.நாராயண் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments